News Article

துபாயில் சிக்கிய இலங்கையை சேர்ந்த பிரதான குற்றவாளிகள்

இலங்கையில் (Sri Lanka) கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்து துபாயில் (Dubai) பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர்கள் இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதன் போது, கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான களுதுர தினேஷ் சமந்த டி சில்வா என அழைக்கப்படும் "பாபி" மற்றும் மட்டக்குளி,சமித்புர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான கங்கனம்ல திமுத்து சதுரங்க பெரேரா ஆகிய இரண்டு குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, இன்று காலை 05.10 மணியளவில் துபாயில் இருந்து வந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனையடுத்து, விசாரணைகளுக்காக கங்கணம்லவின் திமுத்து சதுரங்க பெரேரா கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடமும், களுதுர தினேஷ் சமந்த டி சில்வா கொழும்பு நாரஹேன்பிட்டி படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமும் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment