News Article

இன்று முதல் ஆரம்பமான இந்தியா - இலங்கை கப்பல் சேவை

இந்தியா (India) - நாகபட்டினத்தில் (Nagapattinam) இருந்து காங்கேசன்துறைக்கான (Kankesanturai) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (16) நண்பகல் 12 மணிக்கு இந்தியாவிலிருந்து புறப்பட்டு மாலை 3 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.

இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி 'சிவகங்கை' பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றிருந்த நிலையில் அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட 'சிவகங்கை' பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment