முன்னாள் பெண் போராளிக்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம்
முன்னாள் பெண் போராளியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர் கருணாநிதி யசோதினிக்கு ஆதரவான தேர்தல் பரப்புரை கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பரப்புரை கூட்டமானது வன்னிவிளாங்குளம் பகுதியில் போராளிகள் நலன் புரிச்சங்க செயற்பாட்டாளர் கரன் தலைமையில் இன்று(21.10.2024) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, வன்னி தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடும் முன்னாள் போராளி கருணாநிதி யசோதினி, யாழ். மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் கவிஞர் மாணிக்கம் ஜெகன் முன்னாள் போராளி ஐங்கரன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியுள்ளர். அத்துடன், முன்னாள் பெண் போராளியான கருணாநிதி யசோதினி வன்னி தேர்தல் மாவட்டத்தில் சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a Comment