சிறீதரனின் தலைமைக்கு சுமந்திரனின் தரப்பு ஒருபோதும் இடமளிக்காது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக பதவியேற்பதற்கு சுமந்திரனும் அவரின் சகாக்களும் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவரான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் யாழில் நேற்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "தமிழரசு கட்சியின் தலைவராகி விட வேண்டும் என்னும் சிறீதரனின் எதிர்பார்ப்பு ஒரு கனவு. அதற்கு சுமந்திரனும் அவரின் கூட்டும் ஒருபோதும் இடமளிக்காது. இதை சிறீதரன் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியே சிறீதரன் வெற்றி பெற்றாலும் சுமந்திரன் அதனை கேள்விக்குட்படுத்துவார்" என தெரிவித்துள்ளார்.
Leave a Comment