வவுனியாவில் திடீரென நிலவும் காலநிலை... பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
வவுனியாவில் சமீப நாட்களை விடவும் இன்றையதினம் (22-12-2024) சற்று அதிக பனிமூட்டமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி பயணித்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் வாகனத்தில் வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
Leave a Comment