சாலை விபத்துக்களில் இறந்தோரின் எண்ணிக்கை வெளியானது
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 13 வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 2243 பேர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில், மொத்தம் 22,967 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதோடு, இதில் 2141 உயிரிழப்புகள் உள்ளன. விபத்துக்களில், 6500 கடுமையான விபத்துகளும் 9127 சிறிய விபத்துகளும் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், நேற்று மாத்திரம் ஏற்பட்ட சாலை விபத்துகளில் ஐந்து பேர் இறந்துள்ளனர் மற்றும் 56 பேர் காயமடைந்துள்ளனர். ஹட்டன், மல்லியப்பு பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர், 46 பேர் காயமடைந்தனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். வேன் மற்றும் பாரவூர்தி மோதியதில் ஆறு பேர் காயமடைந்தனர். கடுகண்ணாவையில் பேருந்து ஒன்று மரத்தில் மோதியதில் 10 பேர் காயமடைந்தனர். இந்தநிலையில் பண்டிகைக் காலத்தில் விபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
Leave a Comment