News Article

மரண சடங்கிற்கு யாழ்ப்பாணம் வந்து சென்ற பெண் விபத்தில் மரணம்

மரணச் சடங்கு ஒன்றுக்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் (13.11.2024) உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த பெண்ணும் அவரது உறவினர்களும், யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உறவினரின் மரணச்சடங்கொன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்தாம் திகதி வானில் வீடு நோக்கி புறப்பட்டிருந்தனர். இதன்போது, கொக்காவில் பகுதியில் பன்றி ஒன்று வீதிக்கு குறுக்கே ஓடிய நிலையில் பன்றியின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை வலது பக்கம் நோக்கி திருப்பியவேளை வாகனம் தலைகீழாக புரண்டுள்ளது. இந்நிலையில், விபத்தில் படுகாயம் அடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மூவரும் கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி விபத்துக்குள்ளான பெண் நேற்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Leave a Comment