முட்டை விலை 65 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம்
முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உற்பத்தி சார் விலைகள் மும்மடங்கு அதிகரித்துள்ளமையால் கோழி தீவனத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலையை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று ஒரு முட்டையின் உற்பத்தி விலை சுமார் 38 ரூபாய் என்றும், ஆனால் விவசாயி ஒரு முட்டையை 30-31 ரூபாய்க்கு 7 ரூபாய் நஷ்டத்தில் விற்பனை செய்வதால் பலரும் பண்ணை உற்பத்தியினை கைவிட்டுள்ளனர். இந்நிலையில், கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு முட்டை விலை 60 – 65 ரூபாய் வரைக்கும் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Comment