வவுனியாவில் தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரங்களை அகற்றும் முயற்சியில் பொலிஸார்
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில் வவுனியா (Vavuniya) நகரப் பகுதிகளில் வேட்பாளரின் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக நகரத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் இவ்வாறான வேட்பாளர்களின் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட அட்டைகள், துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா - மன்னார் வீதியிலும் பெருமளவான துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. பெருமளவிலான பொலிஸார் சம்பவ இடங்களுக்கு சென்று அவற்றை துரிதமாக அகற்றி எரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Comment