52 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்


Wed,08 May 2024 06:00

  இதன்போது கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேர்ந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையுமே அவர்கள் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் என்பவரும் இந்தியாவிலிருந்து திரும்பும்போது கைது செய்யப்பட்டு கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தனது விடுதலைக்காக நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆனந்தவர்ணன் உடல் நலக்குறைவால் அவதியுறுவதாகவும், உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியதோடு, இவ்விடயம் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news