71 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

கிளைமோர் தயாரித்தார்கள் என முன்னாள் போராளி உள்ளிட்ட இருவர் கைது


Sat,08 Dec 2023 16:00

 

மன்னார் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான ஆரோக்கியநாதன் சவேரியன் (வயது 48) என்பவரும் அவருக்கு உதவியதாக நாச்சிகுடா பகுதியை சேர்ந்த தம்பு குணசேகரம் (வயது 63) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நாச்சிகுடா பகுதியில் தம்பு குணசேகரம் படகுகள் ஒட்டு (பைவர்) வேலைகள் செய்யும் சிறிய தொழிற்சாலையை நடாத்தி வருகிறார். அவரது தொழிற்சாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளைமோர் மூடிகளை ஒத்த பிளாஸ்டிக் (பைவர்) பொருட்களையும் , அதனை செய்வதற்கு பயன்படுத்திய அச்சுக்களையும் மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து அவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஜோன்சன் என்பவர் , தொங்கும் பூச்சாடிகளை செய்து தருமாறு கூறி, தன்னிடம் இந்த அச்சுக்களை தந்ததாகவும் , அதனையே தான் வார்த்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் போராளியான ஜோன்சனை கைது செய்து , ருவரையும் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதேவேளை , ஜோன்சன் சிவில் பாதுகாப்பபு திணைக்களத்தில் பணியாற்றி வருபவர் எனவும், மாவீரர் வாரத்தில் மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வினை முன்னிட்டு நடத்தியவர் எனவும் தெரியவந்துள்ளது.


  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news