62 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

தொடரும் கொக்குத்தொடுவாய் அகழ்வுப்பணி: மனித புதைகுழியில் மேலும் பல மனித எச்சங்கள்


Wed, 22 Nov 2023 06:00

 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இரண்டாவது நாளாக நேற்றயதினம்(21.11.2023) முன்னெடுக்கப்பட்டது.குறித்த அகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி இரண்டாவது கட்ட அகழ்வுப்பணி இன்று இடம் பெற்றிருந்தது. இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

அந்த எலும்புக்கூட்டு உடற்பகுதியில் இருந்து துப்பாக்கி சன்னங்கள், குண்டு சிதறல்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் இலக்க தகடு ஆகியன எடுக்கப்பட்டன.இலக்க தகடுகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறியத்தரப்படும். தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும்.எதிர்வரும் 24அம் திகதி வெள்ளிக்கிழமை விஷேட ஸ்கான் இயந்திரம் மூலம் இவ் மனித புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது, எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவலை அறிவதற்காக விஷேட ஸ்கான் சோதனை நடைபெறும்." என்றார்.

  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news