60 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி கிடைப்பதில்லை: குற்றச்சாட்டு


Tue, 14 Nov 2023 20:00

  குறித்த விடயத்தை நேற்று(14)கிளிநொச்சி,முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளனர்.

“எமது உறவுகள் எமது பிள்ளைகளை எமக்கு பெற்றுத்தர வேண்டும். அதற்கான தீர்வையும் தரவேண்டும் என வலியுறுத்தியே தாம் கடந்த 14 வருடமாக போராட்டங்களை நடத்திவருகிறோம். O.M.P அலவலகம் என புதிய புதிய அலுவலகங்களை திறந்து வைக்கின்றார்கள். அவர்கள் எதும் எமக்கு தெரியாமல் எவருக்கும் இழப்பிடு வழங்குகிறார்களோ தெரியாது. இதுவரையில், எமக்கு நிதி வழங்கப்படவில்லை. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எவருக்கும் பணம் வழங்கப்படவில்லை.இது தொடர்பாக சர்வதேச அமைப்புகளிடம் கூட கதைத்து வருகிறோம். எந்தவித தீர்வும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. ஒவ்வொரு வருடமும் வரவு செலவு திட்டத்தின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கென நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்த நிதி எந்த வகையிலும் தமக்கு கிடைக்கப் பெறுவதில்லை” என என வட மாகாண காணாமல் ஆக்கப்பட்ட சங்கங்களில் தலைவி கலாரஞ்சினி குறிப்பிட்டுள்ளார்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தாம் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை ஒன்றே தேவை. இவற்றை கூறியே தாங்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பாதீட்டில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயத்துக்கு கண்டணம் தெரிவிக்கின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம். இருப்பினும் எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஓ.எம்.பியின் செயற்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தாங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்த போதும், தங்களுடைய எதிர்ப்பை மீறியும் அதற்காக பாரிய நிதிகளை ஒதுக்கி வீணாக செலவழித்துள்ளது.தற்போது சர்வதேச நீதியை கோரி போராடுகின்ற எங்களுடைய போராட்டத்தை சர்வதேச சமூகம் உற்று நோக்கியுள்ள வேளையில் எங்களுடைய போராட்டத்தை சிதைப்பதற்காக அதற்கு இழப்பீட்டை வழங்குவதாக கூறி, சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கலின் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற விடயத்தை ஒத்துக் கொண்டமை நல்ல விடயம்.எமக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நீதியே தேவை, நிதி தேவையில்லை” என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி குறிப்பிட்டிருந்தார்.


  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news