74 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

இறந்த மகள் துவாரகா மீண்டும் வர முடியுமா? இறந்த தேசிய தலைவரை விற்று பணம் வசூலிப்பது யார்?


Fri, 20 Oct 2023.16:15

 

துவாரகா என குறிப்பிடும் நீங்கள் எங்கள் தேசிய தலைவரின் மகள் என்று குறிப்பிடுவதை நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கின்றது. எம் தேசியத் தலைவர் வந்து கூறுவார? இந்த போலி கடித்தை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ முத்திரை இல்லாமல் வெளியிட்டு தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள், DNA பரிசோதனை செய்து பார்க்களாமா?

தேசியத் தலைவர் உயிருடன் இருந்தால், மதிவதனி அக்கா உயிருடன் இருந்தால், பாலச்சந்திரன் உயிருடன் இருந்தால், எமது தேசியத் தலைவரை நேசித்த தமிழ் மக்களுக்கு, இப்படிப் பொய்யான கடிதங்கள் மூலம் தனது இருப்பை குறிப்பிட்டிருக்க மாட்டார். அவரது மகள் மூலம் வெளிக் கொண்டுவர மாட்டார். இறுதி யுத்தத்தில் எமது போராளிகளை போர்க்களத்தில் தனித்து விட்டு அவர் அவரின் குடும்பத்தினருடன் மாத்திரம் தப்பிச் சென்றிருக்க மாட்டார். தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டும் காக்க போர்க்களத்தை விட்டு ஓடிப்போகும் அளவுக்கு முதுகெலும்பில்லாத தலைவன் அல்ல அவர். எங்கள் தலைவர் மாவீரன்

நமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிப் போரில் இறந்தார் என்பதை DNA சோதனை மூலம் இலங்கை அரசு நிரூபித்துள்ளது. அவரது உடல் மக்கள் பார்வைக்கு காட்டப்பட்டது. தமிழ் மக்களாகிய எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அதுதான் உண்மை நிலை. நமது தேசிய தலைவர் உயிருடன் இல்லை.

சுமார் 35 வருடங்களாக தமிழ் மக்களுக்காகப் போராடிய எமது தேசியத் தலைவரின் பெயரையும், துவாரகை என்ற போலிப் பாத்திரத்தையும் மக்களிடம் காட்டிச் செய்யும் பண வசூல் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். உங்களைப் போன்றவர்களின் கீழ்த்தரமான செயல்கள் தவறான செயல் என்பதை உங்களுடன் பயணிக்கும் நபர்கள் உணரும்போது, உங்கள் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல், கீழ்த்தரமான செயல்களை ஆதரிக்காமல், இருப்பதன் காரணத்தால்அவர்களை இலங்கை புலனாய்வுத் துறையின் முகவர்கள் என குறிப்பிட்டு அவர்களை தமிழ் இன துரோகிகள் என மக்கள் முன் சித்தரிக்காதீர்கள். உன்னதமான தேசியத் தலைவரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் பணம் சம்பாதிக்க விற்காதீர்கள். நீங்கள் ஆடம்பரமாக வாழ பிறரின் பதவிகளை அபகரிக்காதீர்கள். தேசிய தலைவரின் தியாகத்தை விற்காதீர்கள். சமூக வலைதளங்கள் மற்றும் முகநூல் மூலம் இதுபோன்ற பொய்யான செய்திகளை வெளியிட்டு பணம் வசூலிக்க வேண்டாம்.

புலத்தில் வாழும் உறவுகளே.. தாய் மண்ணிலும் உள்ள உறவுகளே! சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகளை உருவாக்கி பணம் வசூலிக்கும் கேடுகெட்ட மனிதர்களின் கீழ்த்தரமான செயல்களை கண்டு ஏமாறாதீர்கள். நமது தேசிய தலைவரும். குடும்பத்தினரும் எம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றுவிட்டனர். பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். அவர் நடந்த பாதையில் எம் விடுதலைப் பயணத்தை தொடருவோம்!

  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news