87 Welcome kilinochchicnews.com
main
   
  Full Story

மாங்குளத்தில் வெடிப்பு சம்பவம்:சிறுவன் உட்பட இருவர் படுகாயம்


Thu,07 Sep 2023 18:00

 

மாங்குளம் நீதிபுரம் பகுதியை சேர்ந்த இருவரும் விறகு எடுப்பதற்காக சென்ற போதே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் மாரிமுத்து மணியம் (84 ) என்ற வயோதிபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த பார்த்தீபன் நிதர்சன் (06) எனும் சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் .மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Related Videos
   Add comment
Comments will be edited (grammar and  spelling) and authorized at the discretion of Kilinochchi CNews  Centre . The website also has the right not to publish selected comments.
 
Name
Email
Comments

                                     

 

 
 
  Recent Comments
 
             

 
  2022 Kilinochchi C news